பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி விளையாடிய சிறுவன் உயிரிழப்பு…!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் மூச்சுத்திணறி இறந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
வேளஞ்சேரி கிராமத்தை சேர்ந்த சங்கீதா என்ற பெண் தனது ஐந்து வயது மகன் சுஜித்தை வீட்டில் தனியாக விட்டுவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார். மீண்டும் வீடு திரும்பிய போது தலையில் பிளாஸ்டிக் கவர் மாட்டிய நிலையில் சிறுவன் சுஜித் இறந்து கிடந்தான் என்று கூறப்படுகிறது.
பிளாஸ்டிக் கவரை தலையில் மாட்டி விளையாடியபோது சிறுவன் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் போலீசார் சங்கீதாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






