--- --:--:-- --

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு..!

2

துரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிறைவடைந்துள்ளது. உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது.7 சுற்றுகளாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தற்போது நிறைவடைந்தது.

 

இருபத்திநான்கு காளைகளை தழுவி முதலிடத்தை பிடித்தார் அவனியாபுரம் மண்ணின் மைந்தன் கார்த்திக். தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தி வந்த முருகன் காயம் காரணமாக 19 காளைகளை அடக்கி இரண்டாமிடம் பிடித்தார். 11 காளைகளை பிடித்த பரத் மூன்றாம் இடத்தை பெற்று பரிசைப் பெற்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon