--- --:--:-- --

மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் அறைக்கு தருமபுரி ஆதினம் சீல் வைப்பு..!

4

துரை ஆதீனம் அருணகிரி நாதரின் அறையை தர்மபுரி ஆதினம் பூட்டி சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆதீனம் அருணகிரிநாத உடல்நலக்குறைவால் மதுரை கேகே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

அவரை நலம் விசாரிக்க வந்த தருமபுர ஆதீனம் மதுரை ஆதினத்தின் அருணகிரிநாதரின் அறையை பூட்டி சீல் வைத்து சென்றார்.

 

மதுரை ஆதீனம் குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் இருந்த அறையில் தான் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான சொத்து பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள், பணம் வைக்கும் லாக்கர் மற்றும் மடம் சம்பந்தமான முக்கிய பொருட்கள் உள்ளன. அந்த அறையை பூட்டி சீல் வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon