அடுத்தடுத்து ஹிட் ஆகும் சாய்பல்லவியின் பாடல்கள்..!
தென்னிந்திய திரையுலகில் தமிழ், மலையாளம், தெலுங்கு ரசிகர்களை தன்பக்கம் வசீகரிக்கும் முன்னணி நடிகையாக சாய்பல்லவி வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஓவர் மேக்கப், பந்தா எதுவும் இல்லாமல் பக்கத்து வீட்டு பெண் போல் காந்தமாக வளம்பெறும் சாய்பல்லவி யாருக்குத்தான் பிடிக்காது. மற்ற நடிகைகள் அவரது ஆடைகளாலும், கிளாமராலும் ரசிகர்களை கவர முயற்சிக்க சாய் பல்லவி மட்டும் அப்படி எதுவும் இல்லாமல் நடனத்தால் மட்டுமே ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தமிழில் தனுஷுடன் சாய் பல்லவி நடித்த மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் அண்மையில் 1200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. தற்போது தெலுங்கில் சாய்பல்லவி நடித்துள்ள பிரபல பாடல் 350 மில்லி கடந்துள்ளது.
இந்நிலையில் சாய்பல்லவி நடித்து விரைவில் வெளிவர உள்ள லவ் ஸ்டோரி படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் தற்போது 300 மில்லியன்களை கடந்துள்ளது. அடுத்தடுத்து சாய்பல்லவி ஆட்டம்போடும் பாடல்கள் ஹிட் அடித்து வருகிறது.







