--- --:--:-- --

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாளை நாடு முழுவதும் மருந்துக் கடைகள் வேலைநிறுத்தம்

6

ன்லைன் மருந்து விற்பனையில் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுவது மற்றும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலி மருத்துவப் பரிந்துரை சீட்டுகளை பயன்படுத்தி மருந்துகள் விற்பனை செய்யப்படுவது ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் மருந்துக் கடை உரிமையாளர்கள் நாளை (மே 20) ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

 

 

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள சுமார் 35,000 மருந்துக் கடைகள் திறக்கப்படாது என மருந்துக் கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மருந்து விற்பனை பொதுமக்களின் சுகாதார பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும், மத்திய அரசு உடனடியாக கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon