--- --:--:-- --

அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லா அவல நிலை

10

மிழக முன்னாள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உள்நோயாளிகள், புறநோயாளிகள் என, தினமும் சுமார் 6,000 பேர் சிகிச்சை பெற்று வரும் மிக முக்கியமான மருத்துவமனை.

 

இங்கு, கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக, குடிநீர் வசதி இல்லாமல், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே, அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்காமல் அவலநிலையில் வைத்திருக்கிறது திமுக அரசு.

 

உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், அடிப்படை வசதிகளான, சுத்தமான குடிநீர், சுகாதாரமான மருத்துவமனை வளாகம், போதிய மருத்துவர்கள், மருந்துகள் என அனைத்தும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Right Menu Icon