--- --:--:-- --

ஹாஃப்-பாயிலாக சாப்பிட வேண்டாம் என முட்டையை சொல்லவில்லை – அமைச்சர் விளக்கம்

2

றவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கையாக ஹாஃப்பாயிலாக சாப்பிட வேண்டாம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியிருந்தார். இது முட்டையை அவர் குறிப்பிடுவதாகப் புரிந்து கொள்ளப்பட்ட நிலையில், அமைச்சர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கடந்த வாரத்தில் பறவைக்காய்ச்சல் ஏற்பட்டு சில பறவைகள் இறந்தன.

 

இந்தக் காய்ச்சல் மக்களுக்கும் ஏற்படக்கூடும் என்பதால், அதுதொடர்பான சில விழிப்புணர்வை பொது சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி ப்ளூ போன்ற அறிகுறிகள் (II) – இருமல், சளி, காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் இன்று சென்னை ஓமந்தூரார் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கோழி போன்றவைகள் திடீரென்று இறந்து போனால் இறந்த கோழியினை யாரும் சாப்பிட வேண்டாம். மேலும் கோழி இறைச்சியை உண்பவர்கள் நன்றாக சமைத்த உணவினையே உண்ண வேண்டும். ஹாஃப்-பாயிலாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்” என தெரிவித்தார்.

 

அமைச்சர் பேசியதில் ஹாஃப்-பாயில் என்பது முட்டையை ஹாஃப்-பாயில் செய்து சாப்பிடுவது என புரிந்து கொள்ளப்பட்டது. இந்நிலையில் அதை மறுத்து தற்போது விளக்கம் கொடுத்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். தான் சிக்கனை நன்கு வேகவைத்து சாப்பிட வேண்டும் என்றே கூறியதாகவும், ஹாஃப்-பாயில் என்பது இறைச்சியை குறிப்பிட்டு சொல்லப்பட்டதே எனவும் அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.

 

முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர், “தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சலால் மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்தாலும் மக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

 

நன்கு வேகவைக்கப்படாத இறைச்சியை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது போலவே, காகங்களோ அல்லது கோழி போன்ற பறவைகளோ திடீரென்று காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இறந்து போனால் அதனை கண்டவர்கள் கால்நடைத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும், வெறும் கைகளால் அவற்றை கையாள வேண்டாம் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Right Menu Icon