திடீரென வாழ மறுத்த காதல் கணவன்..வீட்டு வாசலிலேயே உயிரை விட்ட மனைவி..!
மதுரை அருகே சேர்ந்து வாழ மறுத்த காதல் கணவனின் வீட்டு முன்பு இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரியும், பிரகாஷும் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நவீன் பெற்றோர் திருமணத்தை ஏற்கவில்லை. இதனிடையே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு நவீன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாண்டீஸ்வரி நவீனின் வீட்டிற்கு சென்று அவரை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். நவீனின் பெற்றோரோ நவீன் வெளியூருக்கு சென்று விட்டதாக கூறியுள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாண்டீஸ்வரி விஷமருந்தி மயங்கி விழுந்துள்ளார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறுகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





