பாமகவினர் கைதுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!
என்எல்சிக்கு எதிராக மனு கொடுக்க சென்ற பாமகவினரை கைது செய்வதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் பூதங்குடியில் என்எல்சி சுரங்கத்திற்கு வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக சென்ற பாமகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
என்எல்சி சுரங்கத்திற்கு உழவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து பாமகவினரையும், பொதுமக்களையும் மனு கொடுப்பதற்கு கூட அனுமதிக்காமல் கைது செய்தது அடக்கு முறையாகும் அதிகாரத்தை பயன்படுத்தி நிலங்களை பறிக்கலாம் என்றும் கடலூர் மாவட்ட நிர்வாகமும் நினைத்தால் அது மக்கள் முறியடிப்பார்கள் என்எல்சிக்கான நில எடுப்பு பணிகளை அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டு கொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





