மதுரை அலங்காநல்லூர் அருகே முன்னாள்வட்டாட்சியர் ஊர்கண்மாய் வழிதடத்தை கேட் அமைத்து ஆக்கிரமிப்பு..! விவசாயிகள் அதிர்ச்சி..!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கள்ளிவேலிபட்டி ஊராட்சி பகுதியில் தாதகவுண்டன்பட்டி பெரியகண்மாய் மறுகால் வழிப்பாதையை முன்னாள் தாசில்தார் கணவர் அழகர்சாமி என்னும் தனிநபர் குறுக்கே வேலி அமைத்து கம்பிக்கதவுகள் ஏற்படுத்தி பாதையை ஆக்கிரமித்து நீர்வழித்தடத்தை தடை செய்துள்ளனர்.
இதனால் விவசாயிகளின் கால்நடைகளின் மேய்ச்சலுக்கு தடையாகவும்,100நாள் வேலைத்திட்டத்திற்கு வேலையாட்கள் செல்ல முடியாத நிலையில் பெரும் இடையூறாகவும் இருக்கின்றது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த கிராமத்து பொதுமக்கள் ஒன்றுகூடி ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டனர்கள்.

ஊராட்சிமன்றதலைவர் முறையாக விளக்கம் தெரிவித்தும், பேசிப்பார்த்தும் அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற முடியாது என்று கூறியுள்ளார்கள். இந்நிகழ்வினால் அந்த கண்மாயின் நீர்வழித்தடமான 5 கிராம பொதுமக்கள் மத்தியில் பெறும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் இப்பிரச்சனையை சரி செய்து வைக்குமாறு கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்கள்.





