கடையில் பிரியாணி சாப்பிட்டதால் உடல்நலம் பாதிப்பு..!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனை வந்து திடீர் சாலை மறியல் நடத்தினர். உணவகத்தில் வாங்கிய பிரியாணியை சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
16 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் இருபத்தி ஆறு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இரண்டு பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் உடல் உபாதை உருவானது என்பதை மருத்துவமனை தெரிவிக்கவில்லை என்று கூறியும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.





