அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடக்கம்..!
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்குகின்றன. 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். கொரொனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறது. சீறிவரும் காளைகளை பிடிக்க வீரர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.





