கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 100 வயது பாட்டி..!
காஞ்சிபுரத்தை சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒருவர் கூடுதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே நகரை சேர்ந்த மாணிக்கம்மாள் 100 வயதை கடந்தவர்.
இவர் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்கனவே இரண்டு தவணைகள் தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளார். 60 வயதை கடந்தவர்கள், முன்கள பணியாளர்களும் கூடுதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இதை ஏற்று ஓய்வு பெற்ற மருத்துவ அலுவலரான தனது மகன் மூலம் இணையதளத்தில் முன்பதிவு செய்திருந்த மூதாட்டி மாணிக்கம்மாள் கூடுதல் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டார். 100 வயதிலும் அரசின் அறிவுரைகளை ஏற்று தடுப்பூசி செலுத்திக் கொண்ட அந்த பெண்மணியை மருத்துவ பணியாளர்கள் பாராட்டினர்.





