--- --:--:-- --

கரூர் கலெக்டர், எஸ்பி பணி இடமாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு

EC 01

கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. புகாருக்குள்ளான தேர்தல் அலுவலகர்களாக செயல்பட்ட ஒரு சில மாவட்ட ஆட்சியர்களை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து வருகிறது. கோவை, திருச்சி ஆட்சியர்கள் தேர்தல் அல்லாத பணிகளில் பணியமர்த்தி சமீபத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதே போல கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஐஜி தினகரன் ஆகியோரை மாற்றம் செய்ய உத்தரவிட்டது.

 

இந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரையும் இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கரூர் மாவட்டர் ஆட்சியர் மலர்விழி மற்றும் காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோரை தேர்தல் அல்லாத பணிக்கு தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்துள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் வடநேரே காவல் கண்காணிப்பாளராக சசாங் சாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon