த.வெ.க அரசு மோசமான ஆட்சியை நடத்துகிறது : தமிழிசை
தமிழ்நாடு குழப்பமான சூழ்நிலையில் உள்ளது. த.வெ.க அரசு மோசமான ஆட்சியை நடத்துகிறது என்பதற்கு கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் உதாரணமாக உள்ளது. கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஜூலை மாதமே புகார் செய்து உள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதி குரல் எழுப்பிய பின்னர் தான் நீதி கிடைக்கிறது. ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு புகார் வந்து இருப்பது தெரியாமல் 4 மாதங்களாக எல்லாரையும் உங்களையும் ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள். இதை மறைக்க முடியாதென தெரியாதா? என பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




