--- --:--:-- --

ஸ்ரீரங்கம் கோயில் முன்பு உள்ள பெரியார் சிலையை அகற்றிவிட்டு வேதவியாசர் சிலை வைக்க வேண்டும்

7

ஸ்ரீரங்கம் கோயில் முன்பு உள்ள பெரியார் சிலையை அகற்றிவிட்டு வேதவியாசர் சிலை வைக்க வேண்டும்.ஸ்ரீரங்கம் கோயில் முன்புள்ள பெரியார் சிலை உட்பட நாடு முழுவதும் உள்ள பெரியார் சிலைகளை அகற்றிவிட்டு, அந்த இடங்களில் வேதங்களை தொகுத்த வேதவியாசர் சிலைகளை வைக்க வேண்டும் என மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுகுறித்து ஜீயர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கைகள் தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராகவே இருந்து வருகின்றன. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறை எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது. அங்கு இன்று கண்டிப்பாக தீபம் ஏற்றப்படும். அந்த நிகழ்வில் நானும் பங்கேற்க உள்ளேன்.

 

 

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கண்டியூரில் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயில் இடத்தில் இருக்கும் பெரியார் சிலையை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், இன்னும் அகற்றப்படவில்லை. உடனடியாக அந்த சிலையை அங்கிருந்து அகற்றவேண்டும்.

 

அதேபோல. ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் முன்பாக உள்ள பெரியார் சிலை உட்பட நாட்டின் எந்தப் பகுதியில் பெரியாரின் சிலை இருந்தாலும் அவற்றை அகற்றிவிட்டு, அங்கு வேதங்களை தொகுத்து வழங்கிய வேதவியாசர் சிலைகளை நிறுவ வேண்டும்.” இவ்வாறு ஜீயர் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon