500 கிலோ மலர்களை தூவி வரவேற்கப்பட்ட திமுக வேட்பாளர்..!
வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளருக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் 500 கிலோ மலர்களை தூவி வரவேற்ற காட்சி வைரலாகி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செங்குட்டுவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட பி எஸ் கே நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களிடம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து காவேரிப்பட்டினம் முன்னாள் ஒன்றிய செயலாளர் மகேந்திரன் முன்னிலையில் பாலக்கோடு கூட்டு ரோட்டில் திமுக வேட்பாளர் செங்குட்டுவனுக்கு ஜேசிபி எந்திரம் மூலம் 500 கிலோ மலர்களை தூவி வித்தியாசமான முறையில் வரவேற்பளிக்கப்பட்டது. மலர் தூவி பூ மழை பொழிந்த நிகழ்வு வைரலாகி வருகிறது.






