சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வர வாய்ப்பில்லை
உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவுக்கு இதுவரை வழக்கு எண் வழங்கப்படவில்லை. உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் விடுமுறையில் இருந்ததால் நேற்று விசாரணைக்கு வராத நிலையில், குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (நவம்பர் 24) உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால் இன்றும் மனு விசாரணைக்கு வர வாய்ப்பில்லை.
சீராய்வு மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் தமிழக அரசு தரப்பில் முறையீடு ஏதும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கார்த்திகை தீபத் திருவிழா முடிந்த பிறகே இந்த சீராய்வு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் சூழல் உருவாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





