--- --:--:-- --

வேறு எந்த மாநிலங்களிலும் இந்த நிலைமை கிடையாது – நயினார் நாகேந்திரன்

3

திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் கல்லில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் சில தளர்வுகளுடன் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில், திருப்பரங்குன்றம் நோக்கி செல்லும் பல்வேறு பாஜக தலைவர்களும், இந்து அமைப்பினரும் வீட்டுக் காவலிலும், தடுப்பு காவலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

அந்த வகையில், திருப்பரங்குன்றம் நோக்கி செல்ல முயன்ற தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தச்சநல்லூர் காவல் நிலைய எல்லை பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது; “உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டது மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு போட்டிருக்கிறார் தடை உத்தரவு அங்கு தான் இருக்கிறது இங்கேயே ஏன் தடுக்கிறீர்கள் என கேட்டேன் கைது செய்வதாக காவல்துறையினர் என்னிடம் தெரிவித்தார்கள். தனிமனித உரிமையை இந்த அரசு பறிக்கிறது. சட்டப்பிரிவு 24ன் படி தனி மனிதன் கடவுளை வழிபட முழு உரிமை உள்ளது.

 

தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர்கள் பாலியல் தொந்தரவு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அதனை மறைப்பதற்காகவும், மடை மாற்றம் செய்யும் நோக்கிலும் தீபம் ஏற்றுவதை தடுக்கிறார்கள். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மீது இன்று தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பான்மை சமூக மக்களின் உரிமை பறிக்கப்படுகிறது.

 

நாட்டின் உச்சபட்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு அதனை நடைமுறைப்படுத்த இந்த அரசு முன்வரவில்லை. இதற்கு மேல் இறைவன் தான் இந்த ஆட்சிக்கு தீர்ப்பளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் தான் இது போன்ற நிலை உள்ளது. கேரளா போன்ற மற்ற எந்த மாநிலங்களில் இந்த நிலை இல்லை.இந்து அறநிலையத்துறை கோயில்களை பாதுகாப்பதற்கு இருக்கிறது. நாம் அளிக்கும் காணிக்கையை கொண்டு செயல்படும் இந்த துறை தீபம் ஏற்றுவதற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுகிறது. முதலமைச்சருக்கு எந்த அளவு தைரியம் இருக்கிறது இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள்?காலையிலேயே 200 போலீஸ் வீட்டின் வெளியே போடப்பட்டிருந்தது. வெளியே செல்லக்கூடாது என தடை விதித்தனர். அதனையும் மீறி புறப்பட்டு வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர்.

 

 

யாரிடம் சென்று முறையிடுவது என தெரியவில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து கைது செய்யப்பட்ட நயினார் நாகேந்திரன் உட்பட பாஜகவினர், திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon