--- --:--:-- --

புதுச்சேரி மருத்துவ கலந்தாய்வு!

10

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் (MDS) காலியாக உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான இறுதிச் சுற்றுக் கலந்தாய்வுக்கு புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நீட் (NEET) தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியான மாணவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து புதுச்சேரி சென்டாக் (CENTAC) ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:”புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புக்கான முதலாம் சுற்றில் சீட் ஒதுக்கீடு பெற்றவர்கள், கல்லூரியில் சேர்ந்தவர்கள் என சென்டாக்கில் பதிவு செய்த அனைத்து மாணவர்களும் 2-ம் சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

 

2-ம் சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான விருப்பத்தை நாளை (புதன்கிழமை) மாலை 5 மணி வரை சென்டாக் இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். பதிவுக் கட்டணம் செலுத்தி, பாடப்பிரிவு விருப்பங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வரும் நவம்பர் 26-ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம். முதல் சுற்றில் பதிவு செய்த பாடப்பிரிவு விருப்பங்கள் செல்லாது என்பதால், 2-ம் சுற்றில் பங்கேற்கும் மாணவர்கள் புதிதாகப் பாடப்பிரிவு விருப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

 

 

முதலாம் சுற்றில் இடம் ஒதுக்கப்பட்டும் கல்லூரியில் சேராத மாணவர்களின் பதிவுக் கட்டணம் பறிமுதல் செய்யப்படும். அதேபோல், முதலாம் சுற்றில் சேர்ந்த இடத்தை அபராதமின்றி ரத்து செய்ய விரும்பும் மாணவர்கள் நவம்பர் 26-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 

 

கலந்தாய்வு மற்றும் விண்ணப்பம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாணவர்கள் www.centacpuducherry.in என்ற சென்டாக் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon