6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதன்படி கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்கிறது. சேலம் மாவட்டத்திலும் நேற்று மழை பெய்தது. இந்த நிலையில் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





