காவிரி ஆற்றில் நீரை வேடிக்கை பார்த்தவர் தவறி விழுந்து தத்தளிப்பு..!
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
பள்ளிபாளையம் அடுத்துள்ள மதுரையை சேர்ந்த சதாசிவம் என்ற நபர் எதிர்பாரதவிதமாக காவிரி ஆற்றின் நீரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொழுது தவறி ஆற்றில் விழுந்து தத்தளித்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பள்ளிபாளையம் மீனவர்கள் உதவியுடன் சென்று கொண்டிருந்த சதாசிவத்தை பரிசலில் பத்திரமாக மிக்கினார்.





