ஒரே நாளில் தலைகீழாக சரிந்த தங்கம் விலை..!
ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது. அந்த வகையில் ஜூன் 1ஆம் தேதி கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.14,500க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,16,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை குறைந்து வருகிறது.
அந்த வகையில், நேற்று ( ஜூன் 5) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,430க்கும் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,440க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.230 குறைந்து ஒரு கிராம் ரூ.14,200க்கும் சவரனுக்கு ரூ.1,840 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து ஒரு கிராம் ரூ.11,910க்கும் சவரனுக்கு ரூ.1,560 ஒரு சவரன் ரூ.95,280க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





