--- --:--:-- --

5 ஆண்டுகளில் 436 திட்டங்கள் – அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

01

டந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. ‘வெற்றி தமிழகம்’ என்ற பெயரில், திருக்குறளின் அறம், பொருள், இன்பம் ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் துறை வாரியாக தொலைநோக்கு திட்டங்கள் பிரிக்கப்பட்டு, மொத்தம் 436 திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

 

 

அதிகபட்சமாக, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு 37 திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதாரத்தை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. உள் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆகிய இரு துறைகளுக்கும் “போதையில்லா தமிழகம்”, “லஞ்சமில்லா நேர்மையான நிர்வாகம்” என மொத்தம் 30 திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 

 

அடுத்தபடியாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு 28 திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வேளாண்மை, உழவர் நலன் மற்றும் கால்நடை, மீனவர் நலன் துறைகள் செய்து முடிக்க தலா 27 திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், மீனவர்களுக்கான காப்பீடு, பால் உற்பத்தி போன்றவை தொலைநோக்கு இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

 

 

உலகளாவிய சுற்றுலாத் தலங்கள், தமிழ் கலாசாரப் பாதுகாப்பு, கலைஞர்கள் நலன் என சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறைக்கு ஒதுக்கப்பட்ட 26 திட்டங்களையும் விரைவாக செயல்படுத்துவதற்கான வரைவு அறிக்கையை தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்விக்கு 20 திட்டங்களும், மருத்துவம், மக்கள் நல்வாழ்வு துறைக்கு 19 திட்டங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒவ்வொரு துறைக்கும் தொலைநோக்கு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Right Menu Icon