--- --:--:-- --

3 ஆறுகள் இணைப்பு திட்டம் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

2

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் காணொளி வாயிலாக ஆஜராகி தகவல் கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

புதுக்கோட்டையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் காவிரி, வைகை, குண்டாறு தீயணைப்பு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த கோரி உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 3 ஆறுகளில் இணைப்பு திட்டத்தால் விவசாயிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் பயனடைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஆனால் இதுவரை, எந்தவித முனைப்பும் காட்டவில்லை என அவரது மனுவில் குறிப்பிட்டிருந்தார். வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் அவர்கள் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது 3 ஆறுகளின் இணைப்பு திட்டத்தை மூன்று கட்டங்களாக செயல்படுத்த திட்டமிட்டு இருப்பதாக அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இதனை பதிவு செய்த நீதிபதிகள் காவிரி வைகை கொண்டார். இணைப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு இதுவரை நடைபெற்ற பணிகள் இனி மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து நீதிமன்றம் அறிய விரும்புவதாக தெரிவித்தனர்.

 

இந்த வழக்கில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் காணொளி வாயிலாக ஆஜராகி தகவல் அளிக்க உத்தரவிட்டு ஆகஸ்ட் 1ம் தேதி விசாரணையை ஒட்டி வைத்தனர். 3 ஆறுகள் இணைப்பு திட்டமாக ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைப்பு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளார்.

 

Right Menu Icon