தொப்புள் கொடியுடன் சாலையோரத்தில் வீசப்பட்ட பிறந்த சிசு: வாணியம்பாடியில் அதிர்ச்சி சம்பவம்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் சிசுவை, தொப்புள் கொடி முழுமையாக அகற்றப்படாத நிலையில் சாலையோரத்தில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் ரத்தக் கறைகளுடன் உயிரிழந்த நிலையில் கிடந்த சிசுவை கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிசுவை அங்கு வீசிச் சென்றது யார் என்பது குறித்து சுற்றுவட்டார கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





