திறன் தேர்வு எழுதினால் மட்டுமே கட்சியில் பதவி- அண்ணாமலை
பா.ஜ.க.விலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று புதிய இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதில் இணைந்துள்ளனர். கட்சியில் பதவி பெற விரும்பும் நபர்களுக்கு ‘திறன் பயிற்சி’ (Skill Training) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்காகக் கோவையில் “ஏபிஜே அப்துல் கலாம் சென்டர் ஃபார் எத்திக்ஸ் அண்ட் பாலிடிக்ஸ்” (APJ Abdul Kalam Center for Ethics and Politics) என்ற சிறப்புப் பயிற்சி நிறுவனம் தொடங்கப்படவுள்ளது. கட்சியின் அடிமட்டக் கிளைப் பொறுப்பு முதல் மாநில அளவிலான உயர் பதவிகள் வரை, அனைத்துப் பொறுப்புகளுக்கும் வருபவர்கள் இந்தத் திறன் பயிற்சியில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
அண்ணாமலையின் அரசியல் நோக்கம் என்ன, தமிழகத்தில் அவர் கொண்டு வர விரும்பும் மாற்றங்கள் யாவை என்பது குறித்து இதில் பயிற்சி அளிக்கப்படும். அவரோடு பயணிக்கும் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பொது வாழ்க்கையில் கொண்டிருக்க வேண்டிய தகுதிகள் மற்றும் நெறிமுறைகள் குறித்து இந்த மையத்தில் கற்றுத்தரப்படும்.





