திருத்துறைப்பூண்டியில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்..!
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பள்ளி மற்றும் தேவாலயத்திற்கு மிக அருகில் மதுக்கடை அமைக்கப்பட்டிருப்பதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் திரண்டு வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு அதிரடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியிருப்பு மற்றும் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்த பகுதியில் செயல்படும் இந்த மதுக்கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோஷங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து உரிய அதிகாரிகள் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். போலீசாரின் இந்த சமரச உறுதிமொழியைத் தொடர்ந்து கிராம மக்கள் தங்களது முற்றுகைப் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டு கலைந்து சென்றனர்.





