காவலர் எடுத்த விபரீத முடிவு.. போராட்டத்தில் குவிந்த உறவினர்கள்..!
தென்காசி அருகே தற்கொலை செய்து கொண்ட காவலரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த காவலர் மூர்த்தி என்பவர் செங்கோட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 3 மாதங்களாக அவர் பணிக்கு செல்லவில்லை என கூறப்படும் நிலையில் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த உலகில் பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே மூர்த்தி தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.





