நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பி.எஸ்.என்.எல். செல்போன் நெட்வோர்க் பாதிப்பு..!
நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பிஎஸ்என்எல் (BSNL) செல்போன் நெட்வொர்க் சேவை நள்ளிரவு முதல் பல மணிநேரமாக முடங்கியுள்ளதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணியின் போது ஏற்பட்டுள்ள சில இடையூறுகளே இதற்கு காரணம் என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.





