ஆகாஷின் உடலை அடக்கம் செய்ய முயன்ற போலீசாரை தடுத்த உறவினர்கள் கைது
மானாமதுரையில் மூன்று மாதங்களுக்கு முன்பு காவல் நிலைய விசாரணையின் போது உயிரிழந்த ஆகாஷின் உடலை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று அடக்கம் செய்வதற்காகக் காவல்துறையினர் எடுத்துச் சென்றனர்.
அப்போது, உடலை எடுத்துச் செல்லக் கூடாது எனத் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆகாஷின் உறவினர்களைக் காவல்துறையினர் கைது செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





