மீண்டும் திடீரென குறைந்த தங்கம் விலை..!
ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது. அந்த வகையில் நேற்று (ஜூன் 16) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.14,060க்கும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,480க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.14,030க்கும் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.11,750க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.94,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.275க்கும், ஒரு கிலோ ரூ.2,75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





