தமிழக விவசாயிகளை த.வெ.க அரசு வஞ்சிக்கிறது – இ.பி.எஸ் குற்றச்சாட்டு
பயிர்க்கடன் தள்ளுபடியில் தமிழக விவசாயிகளை த.வெ.க அரசு வஞ்சிப்பதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளின் சுமையை குறைப்பதாக த.வெ.க அரசு நாடகத்தை அரங்கேற்றி உள்ளது. தமிழக விவசாயிகள் ஏமாறமாட்டார்கள்.
கடன் தள்ளுபடியில் பாரபட்சம் காட்டுவது நல்ல நிர்வாகத்துக்கு அழகல்ல. கூடுறவு வங்கிகளில் பெரு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தியுள்ளார். த.வெ.க தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, குறு,சிறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை முற்றிலுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.





