திருமணத்திற்கு முந்தைய நாள் காதலிக்கு பயந்து மணமகன் ஓட்டம்..!
கர்நாடக மாநிலம் சிறுங்கீணியில் திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் ஓட்டம் பிடித்ததால் மணப் பெண்ணை திருமணத்திற்கு வந்த அரசு பஸ் கண்டக்டர் கரம்பிடித்தார். சிறுங்கீணியை சேர்ந்த சிந்துவுக்கும், மகனுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.
அவர் வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு வந்த அனைவரிடமும் உண்மையை கூறி திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று கூறியுள்ளார். இதனால் பயந்து போன அவர் திருமண மண்டபத்தில் இருந்து இரவில் ஓட்டம் பிடித்துள்ளார்.
காலையில் செய்வதறியாமல் திகைத்து நின்ற வேளையில் திருமணத்திற்கு வந்த அரசு பேருந்து நடத்துனர் சிந்துவை திருமணம் செய்ய முன்வந்தார். இதையடுத்து அதே முகூர்த்தத்தில் மணப்பெண் சிந்துவை சந்துரு திருமணம் செய்து கொண்டார்.






