த.வெ.க அமைச்சரவையில் 7 பட்டியலின அமைச்சர்கள்: சமூக நீதிக்கு முக்கியத்துவம் கொடுத்த விஜய்
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தற்போதைய அமைச்சரவையில் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டு சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக ராஜ்மோகனும், கூட்டுறவுத் துறை அமைச்சராக காந்திராஜும், கால்நடைத் துறை அமைச்சராக கமலியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சராக தென்னரசும், பத்திரப் பதிவுத்துறை அமைச்சராக லோகேஷ் தமிழ்ச்செல்வனும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சராக மதன்ராஜாவும் பொறுப்பேற்றுள்ளனர். மேலும், கூட்டணிக் கட்சியான காங்கிரஸைச் சேர்ந்த விஸ்வநாதனுக்கு உயர்கல்வித் துறை ஒதுக்கப்பட்டுள்ளதன் மூலம், கல்வி சார்ந்த இரண்டு முக்கியத் துறைகளும் உட்பட மொத்தம் 7 முக்கியப் பொறுப்புகள் பட்டியலின பிரதிநிதிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.





