பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரையும் சிபிஐ காவலில் எடுக்க திட்டம்!
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் உட்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் கைது நடவடிக்கைகள் இருக்கும் என்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அதிமுக பொள்ளாச்சி மாணவர்செயலாளர் அருளானந்தம், அவரது கூட்டாளிகளான ஹேரன்பால், மைக் பாபு ஆகியோர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் மூவரையும் காவலில் எடுத்து விசாரித்ததற்காக நீதிமன்றத்தில் சிபிஐ மனுத் தாக்கல் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் இந்த வழக்கில் மேலும் சில அரசியல் புள்ளிகள் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது நடவடிக்கைக்குப் பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவர் அளித்த புகாரில் சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளம் பெண்களை ஏமாற்றி பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்ததும் அம்பலமானது.






