--- --:--:-- --

டெல்லி சென்ற முதல்வர் விஜய் – தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பான வரவேற்பு

11

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதுதில்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு, தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று (ஜூன் 10, 2026) புதுதில்லி வந்தடைந்த முதலமைச்சர் விஜயை, தமிழ்நாடு அரசின் தலைமை உள்ளுறை ஆணையரும் கூடுதல் தலைமைச் செயலாளருமான ஆர். ஜெயா, இ.ஆ.ப., மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.

 

இந்த பயணத்தின் போது நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலத்தின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்களை முதலமைச்சர் முன்வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon