அண்ணாமலையின் விலகலை பா.ஜ.க தலைமை தற்போது உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக பாஜகவின் தேசியப் பொதுச் செயலாளர் மற்றும் தலைமையகப் பொறுப்பாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் அவர்கள், தமிழக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததை ஏற்றுக்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 6 ஆண்டுகளாக பாஜகவில் பரபரப்பாக செயலாற்றிக் கொண்டிருந்த அண்ணாமலையின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.