ரஜினியின் பெயரைச் சொல்லி நிதி வசூலிக்கக் கூடாது..!
நடிகர் ரஜினிகாந்தின் பெயரை சொல்லி நிதி வசூல் செய்யப்படுவதாகவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் ரஜினி மக்கள் மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. அரசியலுக்கு வர முடியாத சூழல் குறித்து ரஜினிகாந்த் வெளிப்படையாக தெளிவாக கூறியிருப்பதாக ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன் பின்னரும் அவரை அரசியலில் ஈடுபட சொல்லி போராட்டங்களில் ஈடுபட போவதாக சிலர் பேசி வருவது ரஜினிகாந்தை மேலும் நோகடிக்க செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களுக்காக சிலர் நிதி வசூல் செய்வதாக தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் இது வருந்த தக்கது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்ற நிர்வாகிகளும் ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் ரஜினி மக்கள் மன்றத்தின் அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.






