இதயத்தையும், கல்லீரையும் தனது தந்தைக்கு அளிக்க கூறி தற்கொலை செய்துகொண்ட மகள்..!
சென்னையில் தன் தந்தைக்கு இதயத்தையும் கல்லீரையும் கொடுத்து விடுமாறு கடிதம் எழுதிவிட்டு மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாத்தூர் நகரைச் சேர்ந்த பவித்ரா என்ற 24 வயது இளம்பெண் படுத்திருந்தார்.
தன் தோழியின் தந்தை சேகர் என்பவர் இடத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது 59 வயதான சேகர் பவித்ராவிடம் எடுத்த புகைப்படங்களை காட்டி இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் பவித்ரா அதற்கு மறுத்துள்ளார். தொடர்ந்து சேகர் கட்டாயப் படுத்தவே 2019ஆம் ஆண்டு சேகரை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று பவித்ரா கொலை செய்துவிட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பெற்றோருடன் வசித்து வந்த அவரின் தந்தைக்கு மஞ்சள் காமாலை காரணமாக கல்லீரல் செயலிழந்து போனது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த நிலை கண்டு மன உளைச்சலுக்கு ஆளாகி மகள் தற்கொலை செய்து கொண்டார். பவித்ரா பல பக்கங்களுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் தனது இதயம் மற்றும் கல்லீரலை தந்தைக்கு தானமாக கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நான் உங்களை காப்பாற்றுவேன் அப்பா எங்கே தேடினாலும் எனக்கு உங்களை மாதிரி ஒரு அப்பா அம்மா கிடைக்க மாட்டார்கள். நான் குற்றவாளியா அல்லது நிரபராதியா இனிமேல் அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
கடிதத்தை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இறந்த உடலிலிருந்து கண்களை தவிர வேற எந்த உறுப்பையும் மற்றவர்களுக்குப் பயன்படுத்த முடியாது என்றும் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து தான் இதயம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
உயிரோடு இருந்தால் கல்லீரலை கொடுத்திருக்கலாம் தற்கொலை செய்து கொண்டதால் எந்த பலனும் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.






