இயக்குனர் ஷங்கருக்கு தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ்..!
அன்னியன் இந்தி ரீமேக் விவகாரத்தில் இயக்குனர் ஷங்கருக்கு தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த அந்நியன் படத்தை ரன்வீர்சிங் நடிப்பில் ரீமேக் செய்ய உள்ளதாக இயக்குனர் ஷங்கர் அறிவித்துள்ளார்.
இதை அந்த படத்தை தயாரிக்க உள்ள நிறுவனமும் உறுதி செய்தது. தான் தயாரித்த அந்நியன் படத்தின் ஹிந்தி ரியமிக்க தன்னிடம் கதை தடையில்லா சான்று பெறவில்லை என இயக்குனர் ஷங்கருக்கு ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த படத்தின் கதையை மறைந்த எழுத்தாளர் சுஜாதாவிடம் முறையாக பெற்றுள்ளதாகவும் அனைத்து மொழிகளுக்கான உரிமையும் தன்னிடமே உள்ளது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அந்நியன் ஹிந்தி ரீமேக் செய்யப்படுகிறது என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் தன்னிடம் அனுமதி பெறாமல் அந்த படத்தை உருவாக்கினால் அது முழுமையாக சட்டவிரோதமாக செய்வது என்று ஆஸ்கர் ரவிச்சந்திரன் தன்னுடைய நோட்டீசில் கூறியுள்ளார்.






