கொரொனாவால் உயிரிழந்தவரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிச் சென்ற அவலம்..!
சத்தீஸ்கரில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கும் நிலையில் ராஜன்கான் எனுமிடத்தில் இறந்தோரின் உடல்களை மயானம் வரை கொண்டு செல்ல குப்பை வண்டி பயன்படுத்தப்படுகின்றன.
குப்பை வண்டியில் நான்கு நகராட்சி ஊழியர்கள் கவச ஆடை அணிந்து சடலங்களை ஏற்றி சென்றதும் மயானத்தில் உடலை அடக்கம் செய்யும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இது குறித்து கேள்வி எழுந்தபோது சடலங்களை எடுத்து செல்ல வாகனம் ஏற்பாடு செய்து நகர பஞ்சாயத்து பொறுப்பு என்று தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.






