--- --:--:-- --

உடைந்த படிக்கட்டுடன் சென்ற பேருந்து..!

கிருஷ்ணகிரியில் அரசு பேருந்தில் ஆபத்துடன் பயணிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரில் இருந்து போச்சம்பள்ளி வரை தினமும் அரசு பேருந்து இயக்கப்படுகிறது.

 

இந்த நிலையில் இன்று காலை போச்சம்பள்ளி வந்த பேருந்தின் பின்படிக்கட்டுகள் உடைந்து தரையில் உரசியவாறு வந்தது. பயணிகள் பலர் படிக்கட்டை பயன்படுத்த முடியாமல் சிரமத்துடன் ஏறினர்.

 

இந்த நிலையில் பேருந்து நடத்துனர் பேருந்திலிருந்து இருபதுக்கும் மேற்பட்ட பயணிகளை இறக்கிவிட்டு காலியாக பேருந்து இயக்கி சென்றனர்.

 

Right Menu Icon