--- --:--:-- --

பள்ளிவாசலில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை..திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்..!

9

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பள்ளிவாசலில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளிவாசல் ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

 

சோழவரம் பகுதியில் இயங்கி வரும் பள்ளிவாசலில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அரபி மொழியில் குர்ஆன் பயின்று வருகின்றனர். பள்ளிவாசலுக்கு வந்து அரபி பயிலும் சிறுமிகளுக்கு பயிற்சியாளர் முகமது ஆசிப் பாலியல் தொல்லை கொடுப்பதாக குழந்தைகள் பாதுகாப்பு உதவியாளருக்கு புகார் அளிக்கப்பட்டது.

 

இந்த புகாரின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பள்ளிவாசலுக்கு சென்று சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து திருவெண்ணை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சார்பில் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 

இந்த புகாரின் பேரில் பள்ளிவாசல் அரபி ஆசிரியர் முகமது ஆசிபை கைது செய்தனர். மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Right Menu Icon