--- --:--:-- --

சத்தியமங்கலத்தில் இருந்து துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் தோரணங்கள்..!

6

க்கிய அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பாரம்பரிய முறைப்படி தீபாவளி கொண்டாட சத்தியமங்கலத்தில் இருந்து மாவிலை தோரணங்கள், பூமாலைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. வெளிநாடு வாழ் இந்தியர்கள் பாரம்பரியத்தைப் பின்பற்றி தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கொண்டாட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

அதன்படி தீபாவளியை கொண்டாட உள்ள அவர்கள் வீடுகளில் மாவிலை தோரணம், மலர் மாலை ஆகியவற்றால் அலங்கரிக்க விரும்புகின்றனர். இதையொட்டி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மாவிலைகள், செண்டுமல்லி பூக்கள், தோரணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

 

இவை ஐக்கிய அரபு குடியிருப்புகளான ஷார்ஜா, துபாய் உள்ளிட்ட இடங்களுக்கும் மஸ்கட் நாட்டுக்கும் விமானங்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.

 

Leave a Reply

Right Menu Icon