--- --:--:-- --

காவிரி விவகாரம் – முதல்வர் விஜய் ஆலோசனை

1

வேளாண்மைத்துறை மற்றும் நீர்வளத்துறை செயல்பாடுகள் குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்துகிறார். முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் வேளாண்மை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படுவது தொடர்பாக முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார்.

 

 

காவிரி நீர் விவகாரம், குறுவை சாகுபடி, விவசாயப் பயிர்களுக்கான பயிர் காப்பீடு, நீர்நிலைகள் தூர்வாருதல் ஆகியவைகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றுவரும் நிலையில் முதலமைச்சர் விஜய் சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார். காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடுகள், மேகதாது அணை விவகாரம் குறித்தும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் விஜய் கேட்டறிய இருப்பதாக தகவல்.

Leave a Reply

Right Menu Icon