அரசு அலுவலகங்களில் விஜய் புகைப்படம் – அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளில் 108 இடங்களில் அபார வெற்றியைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. விஜயின் திருச்சி கிழக்கு ராஜினாமா, ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராக தேர்வைத் தொடர்ந்து, அக்கட்சியின் பலம் 106 இருந்தது. இந்நிலையில், தமிழக சட்டசபையில் த.வெ.க அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது.
முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். 22 எம்.எல்.ஏ.க்கள் எதிராக வாக்களித்தனர். 5 எம்.எல்.ஏ.க்கள் நடுநிலை வகித்தனர். இதையடுத்து தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். 144 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் விஜய் தலைமையிலான த.வெ.க பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்தது.
த.வெ.க-வுடன் கூட்டணி சேர்ந்ததுள்ள காங்கிரஸ், 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை வழங்கியது. இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் 2 எம்.எல்.ஏ.க்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 எம்.எல்.ஏ.க்கள், ஐ.யூ.எம்.எல் 2 எம்.எல்.ஏ.க்கள், வி.சி.க 2 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்தனர். மேலும், எஸ்.பி வேலுமணி தலைமையிலான அ.தி.மு.க-வின் 25 எம்.எல்.ஏ.க்களுக்கும் ஆதரவு தெரிவித்தனர். த.வெ.க அரசுக்கு ஆதரவு தெரிவித்தால் அ.தி.மு.க-வில் குழப்பம் ஏற்பட்டு பெரும் பிளவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.





