--- --:--:-- --

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்வு..!

5

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

 

 

கடைசியாக ஏப்ரல் 1ஆம் தேதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. ஈரான் போர் பதற்றத்தாலும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பாலும் இன்று அதிரடியாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. நேற்று வரை, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.84-க்கும், டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

 

 

இந்த நிலையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.103.98க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.3.11 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.95.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.10 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.103.67க்கும், டீசல் ரூ.3.11 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.93.14க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 வருடங்களுக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலமும், முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்வதைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon