--- --:--:-- --

பிரபல திரைப்பட நடிகை சித்ரா மாரடைப்பால் காலமானார்..!

1

பிரபல திரைப்பட நடிகை சித்ரா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. கேரளாவை சேர்ந்த சித்ரா குழந்தை நட்சத்திரமாக மலையாளத் திரைப்படங்களில் அறிமுகமாகி பின் நாட்களில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தார்.

 

ரஜினிகாந்தின் ஊர்காவலன், பிரபுவின் சின்னவர், கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய சேரன் பாண்டியன், பொண்டாட்டி ராஜ்யம் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

 

திருமணத்திற்குப்பின் திரைப்படங்களில் நடிக்காமல் சென்னையில் வசித்து வந்தார். இந்த நிலையில் சித்ராவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

Leave a Reply

Right Menu Icon