காவலரை தாக்கி 4 சவரன் தங்கச் சங்கிலியை பறித்த நபர்கள்..!
திண்டுக்கல் அருகே காவலரை தாக்கி தங்கச் சங்கலியை பறித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். செட்டிநாயக்கன்பட்டி இ வி காலனி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.
நல்லாம்பட்டி கருப்பசாமி கோயில் அருகே சென்று கொண்டிருந்த பொழுது மர்ம நபர்கள் சதீஷ்குமார் தாக்கி அவரிடம் இருந்து நான்கு சவரன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளனர்.
அருகில் இருந்தவர்கள் வருவதை பார்த்து மர்ம நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் காவலரை தாக்கிய ராகவேந்திரா மற்றும் அரவிந்த் ஆகிய இருவரை கைது செய்தனர்.





